யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

Published By: Digital Desk 3

09 Apr, 2020 | 06:46 PM
image

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரையில் 89 பேருக்கான  கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றம்  இந்த பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும்,மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்தார் .

யாழ்.போதனா வைத்தயிசாலையில் இன்று வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இச்சந்திப்பில்  யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ், யாழ்.பல்கலைககழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலை துண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலை தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் செ.கண்ணதாசன் கலந்து கொண்டிருந்தனர். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 5 நாட்களில் மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேருக்கு பரிசோதனைகளை ஒரு தடவையில் மேற்கொள்ள முடியும்.

அதற்கு மேலதிகமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செய்வதன் மூலம் 45 பேருக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள  முடியும்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரால் பரிந்துரைக்கப்படும் நபர்களின் மாதிரிகளே குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01