(செ.தேன்மொழி)

மத்திய மாகாணத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள அனுமதிப் பெற்ற மதுபான நிலையங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் காணப்படும் மது பான நிலையங்களில் மிக சூட்சுமுமான முறையில் அதிக விலைக்கு மதுபானங்கள' விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே மத்திய மாகாண காலால் திணைக்களத்தினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் காணப்படும் 500 மதுபான நிலையங்களுக்கு தடை முத்திரை குத்தப்பட்டுள்ளதுடன், மத்தியமாகாணத்தின், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மாத்திரம் சட்டவிரோத மதுபானம் தயாரித்தல், விநியோகித்தல் போன்ற குற்றச்சாட்டின் பேரில் 17 சந்தேக நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.