நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிலையான வருமானமற்ற தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நலன் கருதி அவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் சமர்ப்பித்த திட்டத்திற்கே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலைய ஊழியர்களுக்கான கிருமிநாசினி அறையை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.