அமெரிக்காவின், சிக்காகோவில் உள்ள குக் கவுண்டி சிறைச்சாலையில் 400 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

251 கைதிகளும், 150 ஊழியர்களுமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகியமை கண்டறியப்பட்டுள்ளதாக குக் கவுண்டி சிறைச்சாலை அதிகாரிகள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களில் 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்தும் விட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அவரது மருத்துவ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

சிறைச்சாலை வளாகத்தில் தற்போது 4,700 கைதிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குக் கவுண்டி சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Photo Credit : forbes