கொரோனா வைரசினை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அட்னெட் கெப்பிரெயேசஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலக சுகாதார ஸ்தாபனம் சீனா சார்பான அமைப்பு என அமெரிக்க ஜனாதிபதி குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

நாங்கள் ஒவ்வொருநாட்டுடனும் நெருக்கமாக உள்ளோம்,நாங்கள் நிறக்குருடர்கள்  இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தயவு செய்து தேசிய அளவில் ஐக்கியத்தை பேணுங்கள்,அரசியல் காரணங்களிற்காக கொவிட் 19 பாதிப்பை பயன்படுத்தவேண்டாம் என  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச அளவில் நேர்மையா ஐக்கியமும்,அமெரிக்கா சீனாவின் நேர்மையான தலைமைத்துவமும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வலிமை வாய்ந்தவர்கள் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் கொவிட் அரசியலை தனிமைப்படுத்துங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.