சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 1.5 மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை இதனால் உயிரிழந்தவர்களின் தொகையும் தொற்போது 88,538 ஆக காணப்படுவதுடன் குணமடைந்தவர்களின் தொகை 329,492 ஆக பதிவாகியுள்ளது.

அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவிலும், அதிகமான உயிரிழப்பு சம்பவங்கள் இத்தாலியிலும் இடம்பெற்றுள்ளது.

2019 டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 184 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் பரவியுள்ளது.

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள்:

 • அமெரிக்கா: 431,838 
 • ஸ்பெய்ன்: 148,220 
 • இத்தாலி: 139,422 
 • பிரான்ஸ்: 113,982 
 • ஜேர்மன்: 113,296 
 • சீனா: 82,809 
 • ஈரான்: 64,586 
 • பிரிட்டன்: 61,474 

அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:

 • இத்தாலி: 17,669 
 • ஸ்பெய்ன்: 14,792 
 • பிரான்ஸ்: 10,869 
 • பிரிட்டன்: 7,097 
 • அமெரிக்கா: 4,571 
 • ஈரான்: 3,993 
 • சீனா: 3,213 
 • ஜேர்மன்: 2,349 
 • நெதர்லாந்து: 2,248 
 • பெல்ஜியம்: 2,240 

photo Credit : CNN