நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரையான 24 மணி நேர காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அது மாத்திரமன்றி இதன்போது 496 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மார்ச் 20 முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக 19,441 நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளதுடன் 5,082 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.