பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின்  சான்சிலர் ரிசி சூனாக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தொடர்ந்தும் தீவிரகிசிச்சை பிரிவிலேயே உள்ளார் ஆனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறிஸ்ஜோன்சன் மருத்துவமனை கட்டிலில் எழுந்து அமர்ந்து மருத்துவகுழுவினருடன் உரையாடுகின்றார் என சான்சிலர்  தெரிவித்துள்ளார்.

பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை கொரோன வைரஸ் பாரபட்சம் அற்றதை எங்களிற்கு நினைவுபடுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் வைரசினால் பாதிக்கப்பட்ட யாரையாவது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இது எல்லைகளை மதிக்காத மோசமான வைரஸ்,ஆனால் நாங்கள் மாத்திரம் இதனை எதிர்கொள்ளவில்லை என  சான்சிலர் ரிசி சூனாக் தெரிவித்துள்ளார்.