கொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும்  செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.