கடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலைகள் கரையை கடந்தாலும் சேதங்களை ஏற்படுத்தமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மாறுப்பட்ட கடல் அமுக்கமே அலைகள் உயரக் காரணம் என வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

புத்தளம், கொழும்பு , காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் இவ்வாறான நிலைமை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.