(நா.தனுஜா)

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து. இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீளவும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்நாடுகளின் தூதுவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டத்தொடர் நேற்றைய தினம் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து, இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீளவும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார, பொருளாதாரத் துறைகள் சார்ந்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுதல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.