இலங்கையில் மற்றுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை, இருவர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் தொகையும் 44 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 48 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் தொகை 7 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 139 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகத்தில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 44 குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் புதிய 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார் இருவர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.