கொழும்பின் சில பகுதிகளில் நாளை (09.04.2020) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நாளை வியாழக்கிழமை பகல்  பகல் 01 மணி  தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அத்தோடு, கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15  பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.