இலங்கையில் இன்று (08.04.2020) மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது. 

இலங்கையில் இதுவரை 188 கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 140 பேர் தற்போதும் கொரோனாவுக்கான சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர். 42 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 228 பேர் சந்தேகத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறுகின்றனர். 

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.