நாட்டில் நிலவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் முடக்கப்பட்டுள்ள,  டி வாஸ் பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் வீட்டுக்கழிவுகள் அகற்றப்படாமல், அங்குள்ள மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.இந்நிலையில், இன்றையதினம் கொழும்பு மாநகர சபை கழிவகற்றல் பிரிவினரால், டி வாஸ் பிரதேச மக்களின் வீட்டுக் கழிவுகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், அங்கு சென்ற கொழும்பு மாநகர சபைச் சொந்தமான கழிவகற்றல் லொறியில், குப்பைகளை சேகரித்த பின், குப்பையோடிருந்த லொறியை தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் உட்படுத்தியிருந்தனர்.படங்கள் - ஜே.சுஜீவகுமார்