தேசத்தின் காப்புறுதியாளன் ஆகிய இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் சமூக பொறுப்புள்ள நிறுவனமாக கொவிட் 19 தொற்றை எதிர்த்து போராடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு துரதிஷ்ட வசமாக ஏற்படும் உயிர் இழப்புக்கு அவர்களின் குடும்பங்களுக்கு இலவச நிதி பாதுகாப்பு வழங்க விரு அபிமன் எனும் காப்பினை அறிமுகப்படுத்துகிறது.

விரு அபிமன் காப்பு அனைத்து அரச துறை சுகாதார பணியாளர்களுக்கும் (உதாரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,உதவியாளர்கள்,சாரதிகள்,சிறு தொழிலாளிகள்,பொது  சுகாதார ஆய்வாளர்கள்,பிராந்திய சுகாதார அதிகாரிகள்) இலங்கை ஆயுதப்படையின் உறுப்பினர்கள் (இலங்கை இராணுவம்,இலங்கை கடற்படை ,இலங்கை விமானப்படை,இலங்கை காவல் துறை  மற்றும் சிவில் பாதுகாப்புப்படை) கள அலுவலர்கள்,மாவட்ட செயலகத்தின் உறுப்பினர்கள்,பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் தபால் துறை உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுவார்கள்.

விரு அபிமன் காபின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 1 மில்லியன் பெற்று கொள்ள முடியும். மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழந்தைகள் இருக்குமாயின் காப்பு தொகை ரூபாய் 1.5 மில்லியன் வழங்கப்படும். அதில் ரூபாய் 1 மில்லியன் குழந்தைகள் மத்தியில் பிரிக்கப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்படும்.

தேசத்தின் காப்பீட்டாளராக கொவிட்-19 தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க முன்வந்த அரச துறை ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் மற்றும் ஆயுத படையின் உறுப்பினர்களை பாதுகாப்பதன் மூலம் தேசத்துக்கான எமது கடமையை நிறை வேற்றுவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்.