இந்தியாவில் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்,  கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டாலும்,  அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்காக மாறலாம் என வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.இந்நிலையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,360 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 124 ல் இருந்து 164 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், இந்தியாவில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1018 பேரும், டெல்லியில் 576 பேரும், தமிழகத்தில் 690 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.