திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரக்கும்புற, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நேற்றிரவு, GS-3 ரக மூன்று கைக்குண்டுகளுடன் நபரொருவரை கைது செய்ததாக திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸார் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பரக்கும்புற பிரதேசவாசியான 53 வயதுடையவர் எனவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைக்குண்டுகள் மூன்றும் அயல் வீட்டுக்காரருடையது எனவும் தம்மிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு அயல்வீட்டுக்காரரான முன்னாள் இராணுவ வீரர் தம்மிடம் ஒப்படைத்தாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரரை தேடும் பணியை பொலிஸார் மேற்கொண்டதன் அடிப்படையில் இன்று நண்பகல் முன்னாள் இராணுவ வீரர் (வயது 52)தம்பலகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளையும் சந்தேக நபர்கள் இருவரையும் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்