(இரா.செல்வராஜா)

நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை பூட்டப்பட்டிருந்த அனைத்து மருந்தகங்களும் ( பார்மசி) தற்காலிகமாக திறந்து வைக்கப்படுமென மருந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.நாட்டிலிருக்கும் நோயாளர்கள் நலன் கருதி மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின்  கொரோனா தடுப்பு பிரிவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.