(செ.தேன்மொழி)

இரத்தினபுரியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடுகல்வத்த பகுதியில் நேற்று செவ்வாய்கிழமைபொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குடுகல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து ஒரு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.