அரச நிவாரணங்களுடன் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை - கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம்       

08 Apr, 2020 | 01:14 PM
image

கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள சகல வட்டாரங்களிலும் உதவி தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும், அரசாங்கதின் “சௌபாக்கியா” விவசாய வேலைத் திட்டத்தை ஊக்குவிக்கவும் கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

   

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சமூக இடைவெளியைப் பேணும் வகையில் இடம்பெற்றதோடு உறுப்பினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தபடி கலந்து கொண்டிருந்தார்கள்.

 

மேற்படி சபை அமர்வின் போது, தற்போதைய “கொரோனா” வைரஸ் சூழ்நிலையில் பிரதேச சபைக்கு உட்பட்ட சகல பிரதேசங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறையை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் “கொரோனா” வைரஸ் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து பிரதேசத்தின் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் கேட்டுக் கொண்டார்.

   

அத்தோடு, நாட்கூலி வேலை செய்கின்றவர்கள், ஊனமுற்றோர், விதவைகள், முதியோர் முதலானோரின் தகவல்கள் திரட்டப்பட்டு அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

   

மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள “சௌபாக்கியா” விவசாய வேலைத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊக்குவிக்கும் வகையில் சேதனப் பசலையின் விலையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய இதுவரை காலமும் பிரதேச சபையின் ஊடாக 25 ரூபாவுக்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சேதனப் பசளை இனிமேல் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  

    இது தவிர, மத்திய மாகாண சபையின் ஊடாக விநியோகிக்கப்படும் விதை வகைகளை கொட்டகலை பிரதேச விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், அரசாங்கத்தின் 5000 ரூபா நிவாரண உதவித் திட்டம் கொட்டகலை பிரதேசத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ராஜாமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02