இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சையில் கைது செய்யப்பட்டுள்ள 7 இந்தியர்களையும் தொடர்ந்தும் காவலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1075 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், இதில் 650 மாற்று சிகிச்சைகள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு செய்ய ஒரு மாத கால அவகாசம் வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கு ஒப்புதல் அளித்த நீதவான் விசாரணையை விரைவில் நிறைவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை பிரதிவாதி தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கமைய சந்தேகநபர்களை மிரிஹான விசேட முகாமிற்கு மாற்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதோடு, சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்குமாறு நுகேகொட பிரிவிற்கு பொருப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.