அமெரிக்காவைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞரான ஜோன் ப்ரைன் கொரோனா எனப்படும் கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

ஜோன் ப்ரைன் உலக அளவில் சிறந்த இசைக்கு வழங்கப்படும் கிராமி விருதுகள் விருதை வென்றவர். இந்த விருதுகள் இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது.

இவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறிகளின் "திடீர் தாக்குதலுக்கு" பின்னர் ஆபத்தான நிலையில் உயிரிழந்தார்.

பாடகரும் பாடலாசிரியருமான இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால வாழ்க்கையை நாட்டுப்புற இசையின் கலவையாகக் கொண்டிருந்தார்.

ப்ரைன் தனது இசைத் தொழில் வாழ்க்கையை சிக்காக்கோவில் 1960 களின் பிற்பகுதியில் 14 வயதில் கிட்டார் கற்ற பிறகு தொடங்கினார்.

ப்ரைன் இரண்டு முறை புற்றுநோயிலிருந்து உயிர் பிழைத்தார். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், அவரது கழுத்திலிருந்து புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார். அவரது கழுத்தின் ஒரு பகுதியை அகற்றியபோது, அவரது குரலின் தொனி மாறியது.

2013 ஆம் ஆண்டில், அவரது இடது நுரையீரலில் புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்.