நியுயோர்க்கில் ஒரே நாளில் கொரோனா வைரசினால் 731 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியுயோர்க் ஆளுநர் அன்ரூ கியுமோ இதனை அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் உயிரிழப்புகள் குறைவடைந்து காணப்பட்ட பின்னர் மீண்டும் 731 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 731 பேரை இழந்துள்ளோம், அந்த எண்ணிக்கையின் பின்னால் ஒரு தனிநபர் காணப்படுகின்றார்,ஒரு குடும்பம் காணப்படுகின்றது ஒரு தந்தை காணப்படுகின்றார் ஒரு தாய் காணப்படுகின்றார் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆகவே பெருமளவு நியுயோர்க் மக்களிற்கு மீண்டும் துயரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புதிதாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது,ஐசியூக்களில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது, மருத்துவமனைகளில் இருந்து  வீடு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.