வுகான் நகரத்தின் மீதான முடக்கலை 76 நாட்களிற்கு பின்னர் சீனா முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் முதலில் பரவத்தொடங்கிய வுகான் நகரத்தின் மீதான முடக்கலை இன்று முடிவிற்கு கொண்டுவந்துள்ள சீனா அதிகாரிகள் போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதை தொடர்ந்து ஜனவரி 23 ம் திகதி வுகானை கடுமையான முடக்கலிற்கு உட்படுத்தும் உத்தரவை சீனா அதிகாரிகள் அறிவித்தனர்.

இன்று வுகான் மீதான முடக்கல் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரிலிருந்து சீன தலைநகரிற்கு பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வுகானின் வுச்சாங் புகையிரத நிலையத்தில் முதலாவது புகையிரதத்திற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வுகான் தொற்றுநோய் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது,வுகான் மக்கள் பெரும் விலையை செலுத்தியுள்ளனர் என 21 வயது இளைஞன் ஒருவன் தெரிவித்தான் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது முடக்கல் முடிவிற்கு வந்துள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.