இந்தியாவின் உத்தரகான்ட் மாநிலத்தில் பொதுமக்களிற்கு கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் எமதர்மன் போல வேடமிட்ட ஒருவரை பயன்படுத்துகின்றனர்.

ஹரித்துவாரில் எமதர்மன் போல வேடமிட்ட உள்ளுர் கலைஞர் ஒருவர் நோய் தொற்றிலிருந்து தப்புவதற்காக பொதுமக்களை வீடுகளிற்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளுர் கலைஞர் ஒருவர் எங்களுடன் இரண்டு நாட்களாக இணைந்து பணியாற்றிவருகின்றார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முடக்கலை எங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக நடைமுறைப்படுத்த முயல்கின்றோம்,இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரி நாங்கள் எமதர்மன் போல வேடமிட்ட நபர் ஒருவரை பயன்படுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

எமதர்மன் என்பது மக்கள் மத்தியில் மரணத்திற்கான ஒரு அறிகுறி என தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி  உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் குறித்து அறிவுறுத்துவதற்காக எமதர்மனை பயன்படுத்துகின்றோம்  என குறிப்பிட்டுள்ளார்.

மரணம் கொரோனா வைரஸ் மூலமாக எங்கள் மத்தியில் உலாவுகின்றது என குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரி  எமதர்மன் இந்த நோயின் ஆபத்தை மக்களிற்கு தெளிவுபடுத்த உதவுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் எமதர்மனை காவல்துறையினர் விழிப்புணர்விற்காக பயன்படுத்தியிருந்தனர்.