(ஆர்.யசி)

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் குணமடைய பிரார்த்திப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாக்கியதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

 அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது,

மதிப்புக்குரிய பொரிஸ் ஜோன்சன் அவர்களே, மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் என நான் அறிந்துகொண்டேன்.

எனினும் அரசியல் மற்றும் தனிப்பட்ட சவால்களை வெற்றிகொள்ள ஒரு முதன்நிலை வீரராக நீங்கள் செயற்பட வெகு விரைவில் குணமடைந்து வருவீர்கள் என பிரார்த்திக்கிறேன் என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.