திருகோணமலை மாவட்டத்தின், சம்பூர், கிண்ணியா, துறைமுகப்பொலிஸ் மற்றும் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய குற்றச்சாட்டில் 17 நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்டதன் அடிப்படையில்  சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏழு நபர்களும், சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஜந்து நபர்களும்  துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் நான்கு நபர்களும், கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில்  பலரிடமிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களுக்கு எதிராக குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வழக்கு தொடரப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.