கொரோனா வைரஸ் தொடர்பாக வட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள வட்ஸ் - அப் தகவல் - தொழில்நுட்ப ரீதியில்  பல்வேறு பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல தவறான செய்திகள் அதன் வாயிலாகப் பரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தகவல்களை பகிர  புதிய கட்டுப்பாடுகளை வட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, அதிகம் பரப்பப்படும் தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்.  இதற்கு முன்பு, ஒரு தகவலை அதிகபட்சமாக 5 பேர் வரை அனுப்பும் வசதி இடம் பெற்றிருந்தது. 

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்செய்திகளை கட்டுப்படுத்த உலக நாடுகள், பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கியுள்ள நிலையில், வட்ஸ் அப் நிறுவனம் இந்தக் கட்டுப்பாடுகளை தற்போது கொண்டு வந்துள்ளது.