பிரபல பொலிவூட் தயாரிப்பாளரின் மகள்களுக்கு கொவிட்-19 தொற்று

Published By: Digital Desk 3

08 Apr, 2020 | 12:24 PM
image

'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கரீம் மொரானியின் இளைய மகள் ஷாஸா மொரானிக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு அறிகுறிகள் இல்லை. திங்களன்று அவர் மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்னொரு பக்கம் ஷாஸாவின் மூத்த சகோதரியும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பியுள்ளார். அவருக்கும் இப்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை ஸோவாவும் உறுதி செய்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதைப் பற்றிப் பேசியுள்ள கரீம் மொரானி, "ஷாஸாவுக்கு அறிகுறிகள் இல்லை. ஆனால் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஸோவாவுக்கு அறிகுறிகள் இருந்தது. அப்போது பரிசோதனை செய்யும்போது அவருக்குத் தொற்று இல்லை. இருவருமே இப்போது தனிமையில், சிகிச்சையில் உள்ளனர்" என்று கூறினார்.

இதேவேளை, இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 114 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37