கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் தொடரும் நெருக்கடி நிலையை சமாலிப்பதற்காக அரசாங்கத்தினால், நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர ஆணையாளர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

   மேலும், மார்ச் மாதத்திற்கான நிவாரணத் தொகையை அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.