நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் இன்ஜஸ்ரி தோட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்ஜஸ்ரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக குறித்த நபர்களினால் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டர்சைக்கில் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போது மறைத்து வைத்திருந்த நிலையில் கேரளகஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்யதுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நோட்டன் விதுலிபுரபகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சம்பவங்களின் போதும் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக நோர்வூட்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM