கொரோனா வைரஸைத் தடுக்க INO-4800 என்ற தடுப்பூசியை பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை செய்ய உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும்  13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் 74,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் மைக்ரோசொப்ட் கோர்பரேஷன் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் INO - 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். 

சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்படும்.

இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2020-க்குள் 10 இலட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸிற்காக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 2 ஆவது தடுப்பூசி இதுவாகும்.