மான்செஸ்டர் சிற்றி கால்ப்பந்தாட்டக் கழக முகாமையாளரான பெப் கார்டியோலாவின் தாயார், டோலர்ஸ் சலா கேரியோ, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்களன்று உயிரிழந்துள்ளார்.

82 வயதான டோலர்ஸ் சாலா கேரியோவின் ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஸ்பெயினை தாயகமாக கொண்ட கார்டியோலா, சமீபத்தில் ஸ்பெயினில் கொரோனா பாதிப்புகளுக்கு உதவுவதற்காக 920,000 டாலர் (1 மில்லியன்) நன்கொடை அளித்திருந்தார்.

ஐரோப்பாவில் கொரோனாவின்  தாக்கத்திற்குள்ளான நாடுகளில் ஸ்பெய்ன் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும்.

இங்கு135,000 க்கும் மேற்பட்ட கொவிட் -19 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர், இருப்பினும் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும்  இங்கு இறப்பு விகிதம் அதிகரித்திருந்த நிலையில், ஸ்பெயின் கொரொனா தாக்கத்தின் உச்சத்தை கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகளுடன், பிரீமியர் லீக் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.