நடிகை ஹன்சிகா மோத்வானி புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

'மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து தமிழ் திரையுலகில்  அறிமுகமானதால் தொடர்ந்து நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளியான வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், குலேபகாவலி போன்றவை வெற்றிபெற்ற படங்களாகும்.

தற்பொழுது இவர் கதையின் நாயகியாக நடித்து வரும் 'மகா' படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இவர் புதிதாக 'ஐ ஹன்சிகா' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,' எம்முடைய நெடுநாள் கனவு இது. இதன் மூலம் எம்முடைய ரசிகர்களுடன் ஏராளமான விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

நேற்று தொடங்கிய இவரது சேனலை இதுவரை  6.92K ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். பலர் அவரது இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் மூலம் நடிகை ரம்யா நம்பீசன், நடிகர்கள் மனோபாலா, இயக்குனர் சேரன் போன்றோரின் வரிசையில் நடிகை ஹன்சிகாவும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.