உலகை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள கொவிட்19 எனும் கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில் 209 நாடுகளையும் பிராந்தியங்களையும் பாதித்துள்ள நிலையில் 1,346,004 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நூற்றுகணக்கில் ஆரம்பித்த கொரோனா தொற்று ஆயிரக்கணக்கில் உயர்ந்து தற்போது இது இலட்சக்கணக்கில் செல்கின்றது. நேற்றைய தினம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 73,142 புதிய தொற்றாளர்களாகள் இனங்காணப்பட்துடன் 5230 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளை ஆட்டம் காணச்செய்யும் இந்த கொரோனாவாது அமெரிக்காவை தற்போது ஆக்கிரமித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் அமெரிக்காவில் 30,331 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன். 1255 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் 19 தொற்றாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குவதுடன் நேற்றைய தினம் அதி கூடிய இறப்புகள் பதிவான நாடாகவும் அது உள்ளது. எனினும் அமெரிக்காவில் 19,671 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் தீவிர தன்மையை உணராது முன்னெச்சரிக்கையின்றி செயற்பட்ட அமெரிக்காவின் இன்றைய நிலை ஏனைய நாடுகளுக்கு சிறந்த எடுத்தகாட்டாகும்.

இதேவேளை கொரோனா தொற்றால் இரண்டாவது அதிகூடிய பாதிப்பு ஸ்பெயினில் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 5,029 புதிய கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 136,675 உயர்ந்துள்ளது.

அத்துடன் அங்கு நேற்றைய தினம் 700 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் மொத்த  இறப்பு எண்ணிக்கை 13,341 ஆக காணப்படுவதுடன் 40,437 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை உலகளவில் அதிகூடிய இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ள நாடான இத்தாலியில் நேற்றையதினம் மாத்திரம் 636 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 16,523 ஆக உயர்வடைந்துள்ளது.

3,599 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 132,547 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 22,837 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு அடுத்த நிலையில் பிரான்ஸின் பலி எண்ணிக்கை உள்ளது. இதுவரை அங்கு 98,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8,911 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 833 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் இதுவரை 103,375 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,810 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் ஜேர்மனியில் 226 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 51,608 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 439 பேர் பலியாகியுள்ளனர். 

ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 3,739 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 136 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன்  பெல்ஜியத்தில் 1,632 பேர் உயிரிழந்துள்ளதுடன்  நெதர்லாந்தில் 1,867பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் 19 தோற்றம் பெற்ற  சீனாவில் இதுவரை 81,708 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,331 பேர் இறந்துள்ளதுடன் நேற்று அங்கு 02 உயிரிழப்புக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது. அத்துடன் 39 புதிய நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மூன்று மாத போராட்டத்தில் சீனா கொவிட் 19ஐ வெற்றி கொண்டடுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 180 கொவிட் 19 நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 38 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.