இத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்

Published By: Digital Desk 3

06 Apr, 2020 | 09:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு  சுற்றுலா கப்பலில் பணிக்குழுவின்  சமையல் நிபுணராக  கடமையாற்றிய அனுர பண்டார எனும் இலங்கை இளைஞர்  கடற்படையினர்  இன்று (06.04.2020) பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த கப்பல் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக  கொழும்பு துறைமுகத்துக்கு அருகே வந்த போது கடற்படையினரும் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களும் இணைந்து  இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில், குறித்த இளைஞரை  சொகுசு கப்பலில் இருந்து வெளியே அழைத்து வந்ததாகவும் தற்போது அவரை 21 நாள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக காலி - பூசா முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர்  இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.  இதன்போது கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அங்கு  நோய் வாய்ப்பட்டிருந்த 75 வயது ஜேர்மனி பெண்ணொருவரையும் கடற்படையினர் மனிதாபிமான அடிப்படையில் மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கப்பல் இன்று இலங்கைக்கு வருவதை அறிந்த குறித்த இலங்கை பணியாளர், கப்பலில் இருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விஷேட வேண்டுகோள் ஒன்றினை காணொளி  ஊடாக விடுத்திருந்தார். தம்மை இலங்கை பொறுப்பேற்குமாறு அவர்  சமூக வலைத்தளம் ஊடாக இவ்வாரு கோரினார்.

இதனையடுத்தே ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வவைன் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு நடவடிக்கை ஊடாக் அந்த பனியாளர் மீட்கப்பட்டார்.

2700 பயணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு சுற்றுலா கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இன்று அதிகாலை  கொழும்பு துறைமுகத்தை  நோக்கி வந்தது. இந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திலிருந்து 10 கடல் மைல் தூரத்தில் நிறுத்தி வைக்க இதன்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து துறைமுகத்திலிருந்து  கடற்படை மேற்பார்வை கப்பல் ஒன்றிலும் டோரா படகொன்றிலும் கடற்படையினர் உரிய  தொற்று நீக்கல் பாதுகபபு வசதிகளுடன் குறித்த சொகுசு சுற்றுலா கப்பலை அடைந்தனர்.  அதன் பின்னர்  அக்கப்பலில் இருந்து குறித்த இலங்கையர் மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு வைத்து அவருக்கு விஷேட தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், துறைமுகத்திலிருந்து நேரடியாக அவர் காலி பூச தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பட்டார்.

கடந்த 5 ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்திருந்த இந்த கப்பல் அவுஸ்திரேலியாவில் பயணத்தை நிறைவு செய்த போதும், கொரோனா அச்சம் காரணமாக அவுஸ்திரேலியா அக்கப்பலை ஏற்க மறுத்தது. அத்துடன் உலகின் பல நாடுகளும் அக்கப்பலை ஏற்க மருத்து வரும் நிலையிலேயே எரிபொருள் வழங்க இலங்கையின் எல்லைக்குள் வர மனிதாபிமான ரீதியில் அனுமதியளிக்கப்பட்டது. உலக நாடுகள் இக்கப்பலை ஏற்க மறுத்த நிலையிலேயே, குறித்த கப்பல் இத்தாலிய கப்பல் அது சுற்றுலா சென்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு போகும் போது கொரோனா பிரச்சினை வந்துவிட்டது இதனால் அந்த கப்பலை எந்த நாடும் பொறுப்பேற்க மறுத்துவிட்ட நிலையில் மீண்டும் இத்தாலிக்கு செல்கின்றது.

இந்நிலையிலேயே இன்று சுமார் 3 மணி நேரம் எரிபொருள் பெறுவதற்காக இக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்றது.

இதன்போதே, பயணிகள் கப்பலில் இருந்த, இருதய நோய்க்குள்ளான ஜேர்மனி நாட்டுப் பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்ப்ட்டது.  75 வயதான ரோஸ்மேரி மார்கிரட் எனும் பெண் இருதய நோய்க்குள்ளானமையால் மருத்துவ உதவிக்காக அவர் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

'சர்வதேச சட்டங்கள் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு அமைய, இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்கும் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்கும் வலயங்களுக்குள் ஏற்படும் அவசர நிலைமையின் போது நிவாரணத்தை வழங்குவதற்குமான பொறுப்பு இலங்கை கடற்படையினருக்குள்ளது. எனினும், பொறுப்புகளுக்கு அப்பால், உலக நாடே தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதார சவாலை கருத்திற்கொண்டு மனிதாபிமான நோக்குடன் குறித்த ஜேர்மனிய பெண்ணை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றனர்.' என கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரிய பண்டார சுட்டிக்காட்டினார்.

தற்போது குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருத சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது தொடர்பில் இலங்கையில் உள்ள ஜேர்மனி தூதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47