மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு;ள்ள பிரிட்டிஸ் பிரதமர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்கின்றன என டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் நேற்று இரவு நான் மருத்துவமனைக்கு பரிசோதனைகளிற்காக சென்றேன் என பொறிஸ்ஜோன்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எனக்கு இன்னமும்  கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

நான் சிறந்த உணர்வுகளுடன் உள்ளேன்,எனது குழுவினருடன் தொடர்பை தொடர்ந்து  பேணுகின்றேன் என குறிப்பிட்டுள்ள பொறிஸ்ஜோன்சன் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக நாங்கள் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பொறிஸ்ஜோன்சன் பெயர் குறிப்பிடப்படாத மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைகளின்  முடிவிற்காக காத்திருக்கின்றார் என பிரிட்டனின் வீடமைப்பு மற்றும் சமூக விவகாரங்களிற்கான அமைச்சர் ரொபேர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினை முன்னணியிலிருந்து தலைமை தாங்கி நிர்வகிக் கவிரும்பும் பொறிஸ்ஜோன்சனிற்கு இது நிச்சயம் விரக்தியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் அரசாங்கத்தின் நிர்வாகம் அவரின் கையிலேயே தொடர்ந்தும்  காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் அவசரமான நிலையில் அனுமதிக்கப்படவில்லை விரைவில் அலுவலகம் திரும்புவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.