சிஎன்என்

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை மட்ரிடின் லா அல்முடெனா  மயானத்திற்கு பிரேதப்பெட்டிகள் ஏற்றப்பட்ட  வாகனங்கள் வந்து சேருகின்றன.

ஆராதனைகளிற்கான உடையில் காணப்படும் கத்தோலிக்க மதகுரு இறுதி மரியாதை செலுத்துவதற்கு வந்திருக்கும்  குடும்பத்தினரை சந்திப்பதற்காக வெளியில் வருகின்றார்.

ஸ்பெயின் அரசாங்கத்தின் உத்தரவின்படி ஐந்துபேர் அல்லது அதற்கு குறைவானவர்கள் மாத்திரம்  இறுதிநிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.

பிரதேதத்தை ஏற்றி வந்த வாகனத்தின் சாரதி வாகனத்தின் கதவை திறந்து மரப்பெட்டியை காண்பிக்கின்றார்.

அஞ்சலி செலுத்துபவர்கள் பிரேதத்தை ஏற்றி வந்த வாகனத்திலிருந்து விலகி மரநிழலின் கீழ் நிற்கின்றனர்.

அவர்கள்  முகக்கவசங்களை அணிந்திருக்கின்றனர், சிலர் கையுறையுடன் காணப்படுகின்றனர்.

முன்னர் இறுதிசடங்குகளில் ஓருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடுவதை காணலாம் ஆனால் அவ்வாறான காட்சிகளை தற்போது காணமுடியாது.

பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் ஐந்து நிமிடத்திற்குள் முடிவடைந்து விடுகின்றன.

மதகுரு புனித நீரை பிரேதப்பெட்டியின் மீத தெளிக்கின்றார்,அதன் பின்னர் இரு பணியாளர்கள் பிரேதப்பெட்டியை ஸ்டிரெச்சர் போன்ற ஒன்றின் மீது வைத்து உள்ளே தள்ளிவிடுகின்றனர்.

அத்துடன் அனைத்தும் முடிவடைந்துவிடுகின்றது. இறந்தவரிற்கான அஞ்சலி உரைகள் இல்லை, ஆட்கள் இல்லை,பொது இறுதிசடங்குகள் இல்லை, பிரியாவிடை செலுத்துவதற்கு நேரமும் இல்லை.

அந்த பிரேதப்பெட்டியுடன் வந்த வாகனம் அங்கிருந்து அகன்றதும் அந்த இடத்திற்கு இன்னொரு வாகனம் வருகின்றது.

உடல் எரிபடும் இடத்திலிருந்து வெளியாகும்  வெப்பம் போன்று இறுதிசடங்குகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய மயானங்களில் ஒன்றில் இது வழமைக்கு மாறான காட்சியாகும்.

இந்த மயானத்தில் பஞ்சம்,உள்நாட்டு யுத்தம் , ஸ்பெயின் காய்ச்சல் போன்றவற்றில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளை காணலாம்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இறுதிசடங்குகள் மேற்குறிப்பிட்ட விதத்தில் மாற்றமடைந்துள்ளன.

அவர்களின் முகத்தில் பெருந்துயரத்தினை பார்க்கலாம் என்கின்றார் அருட்தந்தை 

மக்கள் தாங்கள் நேசிப்பவர்களை இழந்துள்ளதுடன் மாத்திரமின்றி ஒரு சிலருடன் சேர்ந்த இறுதி பிரியாவிடையை தெரிவிக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

சிலர் அந்த இறுதிநிகழ்வுகளை தங்கள் உறவினர்களிற்கு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.

ஆனால் எப்படியிருந்தாலும் ஒருவர் விரும்பும் இறுதிசடங்கு  இதுவல்ல.

ஸ்பெயினில் கிறிஸ்தவ தேவலாயங்கள்  மூடப்பட்டுள்ள நிலையில் கத்தோலிக்கர்கள் மதகுருவொருவரை நேரில்; பார்க்ககூடிய இடமாக இது காணப்படுகின்றது.

நான் அவர்களுடன் நெருக்கமாகயிருக்க முயல்வேன்,நான் உங்களுடன் இருக்கின்றேன் நீங்கள் தனியாகயில்லை என நான் அவர்களிற்கு தெரிவிப்பேன்,சில நேரங்களில் நான் வேதனையடைந்து அழுவேன் என அருட்தந்தை தெரிவிக்கின்றார்.

வைரசினால் தாக்கப்படலாம் என்ற உணர்வு அவருக்கும் உள்ளது ஆனால் அவர் முகக்கவசங்கள் கையுறைகள் அணியாதவராக காணப்படுகின்றார்,இது வித்தியாசமானதாக காணப்பட்டாலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்,இது எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நான் கருதுகின்றேன்,எனது வாழ்க்கை மக்களிற்கானது,இந்த முக்கியமான தருணத்தில் அவர்களுடன் இருப்பது முக்கியம் என்கின்றார் அவர்.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட ஸ்பெயின் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,மட்ரிட்டே வைரஸ் மையம் கொண்டுள்ள பகுதியாக காணப்படுகின்றது,ஸ்பெயினின் 40 வீதமான மரணங்கள் இங்கேயே நிகழ்ந்துள்ளன,நகரத்தின் பிரேத அறைகளால் உடல்களின் எண்ணிக்கையை கையாள முடியாத நிலையில் தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஒரே தருணத்தில் இரண்டு மூன்று உடல்களை  புதைப்பதாக  மயானங்கள் தெரிவிக்கின்றன.

பெலிக்ஸ் பொவொடாவிற்கு சில வாரங்களிற்கு குடும்ப மதிய உணவின் போது வைரஸ் தொற்றியது,அவரது சகோதரர் தாய்க்கும்  நோய் தொற்றியுள்ளது,மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனினும 77 வயது தாய் உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினில் பலரை போல அவர் தனது தாய்க்கு தொலைபேசியிலேயே விடைகொடுத்தார்.