நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இடவசதி கூடிய இடங்களுக்கு மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டி.எம் சுவாமிநாதனால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறைச்சாலைகளை சீர்த்திருத்த நிலையங்களாக மாற்றியமைக்கும் பொருட்டு சிறைச்சாலைகளில் துரித மறுசீரமைப்பை மேற்கொள்ளும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் சனநெரிசல் மிகுந்த பகுதிகளில் காணப்படுகின்ற கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளை சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபார்சின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.