இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று திங்கட்கிழமை(06.04.2020) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில், இதுவரையில் மொத்தமாக 38 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை மொத்தமாக 135 பேர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், மருத்துவ கண்காணிப்பில் 257 பேர் உள்ளனர்.

அத்தோடு, ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.