Published by T. Saranya on 2020-04-06 19:11:33
(இரா.செல்வராஜா)
நாட்டின் ஆறு மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல், சப்பிரகமுவ, மத்திய ஊவா,தென் ஆகிய மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் 75 மில்லி மீற்றருக்கு மேல்மழை பெய்யுமென வானிலை நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
அவர் மேலும் தகவல் தருகையில்,
கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே மழை பெய்யும், மழை பெய்யும் வேளையில் இடி இமின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.