நோயில்லாத நபர்களில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக, அதிக அளவில் மரணிப்பது 70 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். அதைவிடக் குறைந்த வயதினர் மரணிப்பது சார்பளவில் குறைவாகும். 70 வயதிற்குக் குறைவாக மரணித்தவர்களின் அதிகமானோர் புகைபிடிப்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயினால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைத்துக் கொள்வதற்கு வயோதிபர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் புகைப்பவர்களை அதிலிருந்து விடுதலையாவதற்கும் வலுவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.

சில நாடுகளில் புகைப்பவர்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்காமல் ஏனைய பாதுகாப்பு முறைகளைப்பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. புகைப்பவர்களுக்கு நேரடியாகப்பாதிப்பை வெளிப்படுத்தினால் அது புகையிலைக் கம்பபனியைப் பாதிக்குமெனக் கருதி இவ்வாறு மறைக்கப்படுகிறது என நம்பப்படுகிறது. மேலும் இவ்வாறு மறைக்கப்படாமல் புகைப்பவர்களுக்கு கொவிட் 19 னால் ஏற்படும் பாதிப்பினை நேரடியாக மக்கள் மத்தியில் பரப்பப்படுவதை  புகையிலைக் கம்பனி ஒரு போதும் விரும்பாத அதேநேரம், புகையிலைக் கம்பனி விரும்பாத ஒன்று சாதாரணமாக இடம் பெறாது.

சிகரட் புகைப்பவர்கள் புற்றுநோய், இருதய நோய்களினால் மரணமடைவதற்கு முன்னர் கொவிட் 19 வைரசு தொற்றி மரணமடைவதை சிகரட் கம்பனியானது ஒரு போதும் விரும்பமாட்டாது. இச்சந்தர்ப்பத்தில் சிகரட் கம்பனியானது அதிகமாக விரும்புவது மக்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை மட்டுமே. குறிப்பாக வயதுவந்து புகைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை மிகச் சிறந்த செயற்பாடாகும். ஏனெனில் அவர்களுக்கு இருக்கும் அபாயம் அதிகம். ஆனால் புகையிலைக்கம்பனி இதனை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். ஏனெனில் அது அவர்களின் பிரதி உருவத்திற்கு கறும்புள்ளியாக அமையும் என்பதனால் ஆகும். 

எமது நாட்டில் வயோதிபர்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதுடன் அவர்களைத் தனிமையில் இருப்பதற்கு ஊக்கமளளிப்பதைப் போன்று புகைப்பதை நிறுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

இவை சமூகத்தில் அதிக அளவில் ஏன் பரப்பப்படுவதில்லை என்பதனை அறிந்து கொள்ள முற்படுவதினால் புகைப்பவர்களாக இருப்பினும் அதிக விடயங்களை விளங்;கிக் கொள்ள முடியும்.

புகைப்பவர்களுக்கு இருக்கும் அபாயத்தை துரைசார்ந்தவர்கள் நிரூபித்திருப்பினும், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அது பற்றி உத்தியோகபூர்வமாக எச்சரிக்கையளிக்காமல் இருக்கும் இந்த நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை எந்த அளவு நேசிக்குன்றனர் என்பது வெளிப்படையாகும். 

தகவல்  Alcohol and drug information center