வைப்ப படம்

அரசாங்கத்தின் புதிய வற் வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கம்பஹா நகரின் வியாபாரிகள் இன்றைய தினம் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 

கம்பஹா நகரின் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வற் வரி அதிகரிப்பானது மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வற் வரியை நீக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வற் வரியை நீக்குமாறு கோசங்களை எழுப்பியதுடன் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹர்த்தால் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.