பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டிபென்டர் வாகனம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதெனவும், வாகனத்தின் இலக்கத்தகடு போலியானதெனவும் ரஞ்சன் ராமநாயக்க மற்றும்ஆனந்த அளுத்கமகே நேற்று (21) தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் பொய்யானதெனவும், குறித்த செயற்பாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டபூர்வ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.