இன்றைய தினம் 19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் புதிதாக கேகாலை மாவட்டத்தில் திப்பிட்ய, அரநாயக்கா பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (05.4.2020) இளைஞர் ஒருவர் அப்பிரதேசத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அரநாயக்கா பொலிஸர் , ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாதென நள்ளிரவு வேளையில் ஒலிபெருக்கி ஊடாக அறிவித்தனர்.

மேற்படி இளைஞரின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.  அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வைத்திய அறிக்கை வரும் வரை மேற்படி பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் அரநாயக்கா தெபத்கம என்ற இடத்தில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.