கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அதிகளவான மக்கள் இன்றைய தினம் நகரை நோக்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை பொலிஸாரினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதோடு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

மேலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததுடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.