சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 17ம் திகதியன்று அவர் நடித்து வரும் கோப்ரா படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அப்படத்தின் டீஸர் வெளிவராது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
'கடாரம் கொண்டான்' என்ற படத்தைத் தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் கோப்ரா. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி அகர்வால் நடிக்க, பிரபல துடுப்பாட்ட வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனான விக்ரம், பல தோற்றங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்,
அதில்,
' எல்லா ஸ்டுடியோக்களும் மூடப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி கோப்ரா படத்தின் டீசர் ஏப்ரல் 17ஆம் திகதியன்று வெளியாகாது. டீசருக்கான பணிகள் நெடு நேரம் எடுக்கும் என்றும்' தெரிவித்திருக்கிறார்.
இதனால் சீயான் விக்ரமின் ரசிகர்களும், துருவ் விக்ரமின் ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM