முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத் தளத்தின்  தனிமைப் படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் இன்றையதினம் (06) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலி காரணமாக தனிமைப் படுத்தலுக்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு விமானப் படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்துக்கு அழைத்து வரப்பட்டு கடந்த 14 நாட்களாக கண்காணிக்கபட்டு வந்தனர். 

இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என வைத்திய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தபட்ட நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 05 பௌத்த மதகுருக்கள் உட்பட 203 பேர் நான்கு பேரூந்துகளில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.