அம்பாறை  கலகேன பிரதேசத்தில் மலயாடி பாலத்தில் மோதி காரொன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக தம்பான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகத்துடன்  பயணித்தமையால் வேகத்தினை கட்டுப்படுத்த இயலாது நீரோடையினுள் குறித்த கார் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.